மாத்தறை மாவட்டத்தில் மாபெரும் நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு!

நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு!

மாத்தறை மாவட்டத்தில் மாபெரும் நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு!

இலங்கையின் வரலாற்றில் இதுவரை கிடைத்திருக்காத மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று ஒன்று மாத்தறை - பிட்டபெத்தர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குழாய்க் கிணறு தோண்டும் பணியின் போது இந்த அரிய நீர் ஊற்று கண்டறியப்பட்டது. இதிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன மீட்டர்) நீர் தொடர்ந்து வெளியேறுகிறது.

இதற்கு முன்னர் மன்னார் - மடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஊற்றே மிகப் பெரியதாகக் கருதப்பட்டது. அது ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றர் நீரையே வழங்கியது.பாறைகளை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை இனங்கண்டு இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.