ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் ஒன்றுகூட வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் ஒன்றுகூட வேண்டும்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு உலகத் தலைவர்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலின் அராத் நகரில் ஒரு தாக்குதலைக் கண்காணிக்கச் சென்றபோதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் நெதன்யாகு, "உலகத் தலைவர்கள் நம்முடன் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. சில தரப்பினர் ஏற்கனவே அந்தத் திசையில் நகர்வதை நான் காண முடிகிறது" என்று கூறினார்.
ஈரான் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் என வலியுறுத்திய பிரதமர், ஈரானின் இலக்கு இஸ்ரேல் மட்டுமல்ல, முழு உலகமும் தான் என்று எச்சரித்தார்.
தற்போதைய பதட்டமான சூழ்நிலையில், ஈரானுக்கு எதிரான பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சியில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இராஜதந்திர மட்டத்தில் பல நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளையும் இணைப்புகளையும் இஸ்ரேல் வலுப்படுத்தி வருகிறது.
ஈரானின் அணு ஆய்வுத் திட்டம் மற்றும் அப்பகுதியில் அதன் செல்வாக்கு குறித்த அச்சம் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவி வருகிறது. சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.
Editor