கச்சா எண்ணெய் மீண்டும் பரலுக்கு $100 அதிகரிப்பு!!!!
கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிப்பு!!!!
* ஹார்மூஸ் நீரிணை பதற்றம் நீடிக்கிறது...
* கப்பல்கள் கைப்பற்றல் விவகாரம் பெரும் சர்ச்சை...
* சமாதான பேச்சு - அமெரிக்காவை நம்ப ஈரான் தயக்கம்
பேச்சுவார்த்தை நாளை வெள்ளிக்கிழமை அல்லது வார இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இரு நாடுகளையும் மீண்டும் மேசைக்கு அழைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆனால், அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை (Naval Blockade) நீக்கப்படாமல் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் தயங்குவதாக அல் ஜசீரா (Al jazeera) செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்மூஸ் நீரிணையில், ஈரான் இரண்டு சரக்குக் கப்பல்களை கைப்பற்றியமை, தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பெரும் ஆபத்தாக மாறிள்ளது என அல் ஜசீரா தெரிவித்துளளது...
பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற எம்.எஸ்.சி பிரான்சிஸ்கா (MSC Francesca) மற்றும் லைபீரியக் கொடியுடன் சென்ற எபாமினோண்டாஸ் (Epaminondas) ஆகிய இரண்டு கப்பல்களும் ஈரானிய கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில், எபாமினோண்டாஸ் என்ற கப்பல், இந்தியாவின் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இந்த இரு கப்பல்களும் கடல் விதிகளை மீறி, அனுமதி இன்றி நுழைந்ததாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
தௌஸ்கா ((M/V Touska) என்ற ஈரானின் கப்பல் ஒன்றை, அமெரிக்கக் கடற்படை, சென்ற 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியமைக்கு எதிராகவே, ஈரான் இந்த இரு கப்பல்களையும் கைப்பற்றியுள்ளது.
தற்போது, அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பில் உள்ள ஈரானின் குறித்த அந்தக் கப்பலை, அமெரிக்க இராணுவம், அரசுடமையாக்க ஆலோசித்து வருகிறது.
கப்பலையும் அதில் உள்ள பொருட்களையும் "போர் ஆதாயங்களாக" (Spoils of War) அமெரிக்கா அறிவித்துள்ளது.
இக் கப்பலில் ஈரான் இராணுவத்திற்கு தேவையான "இரட்டைப் பயன்பாடு" (Dual-use) உள்ள தளவாடங்கள் இருந்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் என்று அல் ஜசீரா செய்தி நிறுவனம் எச்சரிக்கிறது...
அதேவேளை, ஈரான் கைப்பற்றிய இரு கப்பல்களும் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய கப்பல்கள் இல்லை என்பதால், அதனை போர் நிறுத்த மீறலாகக் கருதப்படாது என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியது.
ஆனாலும், ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கப்பல்கள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் இன்று வியாழக்கிழமை பரலுக்கு $100 இற்கு மேல் அதிகரித்துள்ளதாக ரொய்டர்ஸ் (reuters) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர
Editor