ஊடகவியலாளர் தம்பிராசா நடராசா அவர்களின் தாயார் காலமானார்.

ஊடகவியலாளர் தம்பிராசா நடராசா அவர்களின் தாயார் காலமானார்.

ராவய வெளியீடான ஆதவன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசா அவர்களின் தாயார் திருமதி விசாலாட்சி தம்பிராசா அவர்கள் 14.07.2026 இன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மாட்டக்களப்பு கறுவாக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், பின்னர் வாழைச்சேனை கறுவாக்கேணி பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் ஊடக நண்பர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.