இளம் வேகப்பந்து வீரராக கறுவாக்கேனி ஷிதுசியான் தெரிவு

கறுவாக்கேனி வீரர் தேர்வு

இளம் வேகப்பந்து வீரராக கறுவாக்கேனி ஷிதுசியான் தெரிவு

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா Malinga அவர்களின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் சிங்கர் ஃபாஸ்ட் ஃபேஸ் பால் பேஸ் (Singer Fast Face Ball Pace )நிகழ்ச்சிக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஏழு வீரர்களில் ஒருவராக கறுவாக்கேனி விக்னேஸ்வரா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் விஜயநாதன் ஷிதுசியான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி முழு இலங்கை அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற தேர்வில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் விஜயநாதன் ஷிதுசியான் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு வீரர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றிருப்பது அந்தப் பகுதி விளையாட்டு வட்டாரங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தெரிவு மூலம் எதிர்காலத்தில் தேசிய மட்ட கிரிக்கெட் துறையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.