T20 உலகக் கிண்ண இறுதியில் இந்தியா அபார வெற்றி – மூன்றாவது முறையாக சாம்பியன்
T20 உலகக் கிண்ண இறுதீ போட்டியில்இந்தியா வெற்றி –மூன்றாவது முறையாக சாம்பியன்
உலகக் கிண்ண இருபதுக்கு–20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் India national cricket team இந்திய கிரிக்கெட் அணியும் New Zealand national cricket team நியூசிலாந்து அணியும் மோதிய நிலையில், இந்தியா 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியனானது. இதன் மூலம் இந்திய அணி T20 உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றி புதிய சாதனையைப் பதித்துள்ளது.
அஹமதாபாதில் அமைந்துள்ள Narendra Modi Stadium நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் Sanju Samson சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து Ishan Kishan இஷான் கிஷன் 54 ஓட்டங்களையும் Abhishek Sharma அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றனர். உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச மொத்த ஓட்டமாக இது பதிவாகியுள்ளது.
256 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி T20 உலகக் கிண்ண வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியனாகும் பெருமையைப் பெற்றதுடன், உலகக் கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ரசிகர்களிடையே இதனைத் தொடர்ந்து பரவலான கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Editor