சமூக ஊடக அச்சுறுத்தல் ; ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது !

சமூக ஊடக அச்சுறுத்தல் ; ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது !

சமூக ஊடக அச்சுறுத்தல் ;  ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் கைது !

சமூக ஊடகங்கள் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், ராஜாங்கனை சத்தாரத்ன தேரரை .மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு எதிராக, சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தேரர் தற்போது CID விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.