பிரவுன்ஸ் ஹில் நில வழக்கு ! பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை !

பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை !

பிரவுன்ஸ் ஹில் நில வழக்கு ! பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை !

பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

மாத்தறை முதன்மை நீதவான் சதுரங்க ஏரங்க திசாநாயக்க முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், மாத்தறை, எலியகண்ட சாலையில் உள்ள பிரவுன்ஸ் ஹில்லில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலம், தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவரது மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், தற்போது அவர் வெளிநாட்டில் நோய் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றில் ஆஜராக இயலாது என்றும் தெரிவித்தனர்.

எனினும், பலமுறை நீதிமன்றில் ஆஜராகத் தவறியுள்ளார் என்ற விடயத்தைக் கருத்தில் கொண்ட நீதவான், அந்தக் கோரிக்கையை நிராகரித்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தார்.

இந்த வழக்கில், பசில் ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி உள்ளிட்ட பலருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.