கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது !
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது !
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த இந்திய பிரஜையான புவியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகையாளர் முனையத்தின் “பச்சை வழி” வழியாக அந்த போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த போதைப்பொருளை கம்பாலா நகரிலிருந்து கொண்டு வந்து, டோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரின் பயணப்பையில் உள்ள சான்றிதழ் கோப்புறைகள் இரண்டு உள்ளே மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 10 கோடி 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் Police Narcotics Bureau அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Editor