காலி முகத்திடலில் ‘சங்கமம் 2026’ புதிய கின்னஸ் உலக சாதனை !

காலி முகத்திடலில் ‘சங்கமம் 2026’

காலி முகத்திடலில் ‘சங்கமம் 2026’ புதிய கின்னஸ் உலக சாதனை !
காலி முகத்திடலில் ‘சங்கமம் 2026’ புதிய கின்னஸ் உலக சாதனை !
காலி முகத்திடலில் ‘சங்கமம் 2026’ புதிய கின்னஸ் உலக சாதனை !

காலி திடலில் நடைபெற்ற சங்கமம் 2026” பரதநாட்டியப் பெருவிழா புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது

இலங்கைக் கலை வரலாற்றில் அழியாத பொன்னான பதிவாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் 4,988 கலைஞர்கள் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர் இத்துறையில் படைக்கப்பட்ட உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்த நிலையில், இன்று காலை அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 988 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, முந்தைய சாதனையை மிக பிரம்மாண்டமான முறையில் முறியடித்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி, பெருந்தோட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் திரு சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மாற்றும் கருத்தாக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாபெரும் நிகழ்வானது, இந்தியாவில் 'சங்கமம் குளோபல் அகாடமி' மற்றும் இலங்கையில் 'சங்கமம் லியா ஹோலிடேஸ்' ஆகியவற்றால் இணைந்து , கே. தினேஷ்குமாரின் நெறியாள்கையில் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 'அயலகா தமிழர் மன்றம்' நிகழ்ச்சியின்போது பிரதி அமைச்சர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கு இந்தியாவிலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

அதன்படி, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடகக் கலைஞர்கள் இந்தத் தனித்துவமான சாதனையை நிலைநாட்டுவதில் பங்கேற்றுள்ளனர்.

ஐக்கிய ராச்சியத்திலிருந்து (UK) இலங்கைக்கு வந்திருந்த கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ நடுவர் ரிஷி நாத், இந்த சாதனை முயற்சியை நேரடியாகக் கண்காணித்தார்.

அதனைத் தொடர்ந்து, கின்னஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ முடிவுகளை அறிவித்து, இலங்கை படைத்த சாதனையை உறுதி செய்தது.

காலங்களில் சர்வதேசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது கணிசமாக அதிகரித்து, நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் மேலும் வளர்ச்சியடைவதோடு, இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரித்துக்கொள்ளவும் இது ஒரு பெரும் ஏதுவாக அமையும் என நாம் திடமாக நம்புகின்றோம்." - என்று தெரிவித்தார்.

இந்த அபூர்வ கலைக் காட்சியை நேரில் கண்டு இ சிப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காலிமுகத்திடலில் திரண்டிருந்தனர்.

இந்த விழாவில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புடன் இணைந்து, கடற்றொழில் மற்றும் நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கலைத்துறை வித்தகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

சலங்கை ஒலியால் அதிர்ந்த கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை, இலங்கைத் தமிழர்களின் கலைத்திறனுக்கும், கலாசார ஒற்றுமைக்கும் என்றும் அழியாத ஒரு சான்றாக உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது.