சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்

சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைது எதிர்ப்பு:: கிளிநொச்சியில் போராட்டம்

சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்
சொல்லிசைப் பாடகர் சங்கீதன் கைதுக்கு எதிர்ப்பு: கிளிநொச்சியில் மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம்

சொல்லிசைப் பாடகர் சங்கீதன் செவ்வாய்க்கிழமை (02) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை( 06) மாபெரும் கவனீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

தமிழ் மக்களின் அவலங்கள், தியாகங்கள், வீரம் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றைத் தனது சொல்லிசை மூலம் பாடல்களாகப் பாடி வந்த சங்கீதனின் கைது, ஒட்டுமொத்த தமிழ்ப் படைப்பாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

"குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்" என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், "பாடினால் பயங்கரவாதமா? தாயகக் கலைஞனை உடனே விடுவி!""தமிழர் வலிகளைப் பாடுவதும் எழுதுவதும் குற்றமா?""ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பயங்கரவாதச் சட்டத்தை உடனே நீக்கு!""சட்டத்தின் பெயரால் நடக்கும் அரச பயங்கரவாதத்தை உடனே நிறுத்து!""உரிமைக்குரல் எழுப்பத் தமிழருக்குத் தடையா? ஜனநாயகம் எங்கே?""உடைப்போம் உடைப்போம்! குரல்வளையின் விலங்கை உடைப்போம்!" எனும் முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பினர். மேலும், இத்தகைய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறும், உணர்ச்சிப் பூர்வமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.