புற்றுநோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு ! ரூ.5 லட்சம் வரை செலவு பதிவிலா மருந்துகளால் பேராபத்து!

அரச மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு !

புற்றுநோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு ! ரூ.5 லட்சம் வரை செலவு பதிவிலா மருந்துகளால் பேராபத்து!

அரசாங்க மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான மருந்துகள் கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தேவையான மருந்துகளை வெளியில்  வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவா தெரிவித்துள்ளார்.

நியூபோஜென் எஸ்.சி. உள்ளிட்ட பல புற்றுநோய் மருந்துகளின் தட்டுப்பாடே இந்த நிலைக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பற்றாக்குறையைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டில் பதிவு செய்யப்படாத புற்றுநோய் மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்கும் ஒரு மோசடிக் கும்பல் செயல்பட்டு வருவதாக டாக்டர் சஞ்சீவா குற்றம்சாட்டினார்.

“சில புற்றுநோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வெளியில் இருந்து வாங்க ஐந்து லட்சத்துக்கும் மேல் செலவிட வேண்டியிருக்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தச் செலவு நோயாளிகளுக்கோ அவர்களின் உறவினர்களுக்கோ முற்றிலும் தாங்க முடியாதது” என்று அவர் கூறினார்.

மேலும், வெளி மருந்தகங்களில் இருந்து வாங்கப்படும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் தரம் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும், சந்தையில் மருந்துகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவது புற்றுநோய்களை மிக  பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நீண்டகால சிகிச்சையில் உள்ள உதவியற்ற நோயாளிகளுக்காகச் சிறப்பு நிவாரணத் திட்டத்தை அமல்படுத்த நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் அவசரக் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் சமல் சஞ்சீவா வலியுறுத்தியுள்ளார்.