நாமலுக்கு எதிரான கிரிஷ் நிதி முறைகேடு வழக்கு: ஜுலை 7ம்திகதி!
நாமலுக்கு எதிரான கிரிஷ் நிதி முறைகேடு வழக்கு!
கொழும்பு கோட்டை பகுதியில் கிரிஷ் நிறுவனம் மேற்கொள்ளவிருந்த பல கோடி ரூபா மதிப்பிலான திட்டம் தொடர்பான நிதி முறைகேடு வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் ஜூலை 7ஆம் திகதி முதல் விசாரிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட "வழக்கு விசாரணைக்கு முந்தைய மாநாடு" (Pre-Trial Conference) இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதனையடுத்து, ஜூலை 7ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பிரதான சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு கோட்டை பகுதியில் கிரிஷ் நிறுவனம் மேற்கொள்ளவிருந்த திட்டத்தின் போது நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கின் அடுத்தகட்ட சாட்சி விசாரணைகள் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்துடன் உற்றுநோக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Editor