மேற்கு வங்காளம் - தமிழ்நாடு மாநிலங்களில் கூடுதல் வாக்களிப்பு
மேற்கு வங்காளம் - தமிழ்நாடு கூடுதல் வாக்களிப்பு
*சர்ச்சைக்குரிய கரூர் மாவட்டத்தில் 91.97% வீத வாக்குகள் பதிவு
*கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.50% வீத குறைந்த வாக்குப் பதிவு
இந்தியாவில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தல்களில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான சத விகிதத்தில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று 23 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வாக்களிப்பில் 91.78% வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற்ற வாக்குப் பதிவில் 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன
தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய கரூர் மாவட்டம் 91.97% என்ற விகிதத்தில் மிக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.50% வாக்குகள் என்ற அடிப்படையில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது.
மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது
மே மாதம் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்...
வாக்குப் பதிவு முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும், வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor