விஜய் ஒரு 'பார்ட் டைம்' அரசியல்வாதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விளாசல்

விஜய் ஒரு 'பார்ட் டைம்' அரசியல்வாதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விளாசல்

விஜய் ஒரு 'பார்ட் டைம்' அரசியல்வாதி  திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் விளாசல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக வேட்பாளரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்துள்ளார். இத்தொகுதியில் நட்சத்திர வேட்பாளரான விஜய் களம் இறங்கியுள்ளதால், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் தற்போது திருச்சி மீது திரும்பியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய இனிகோ இருதயராஜ், திரைத்துறை புகழுக்கும் அரசியல் ஆளுமைக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியைச் சுட்டிக்காட்டினார் விஜய் திரையில் சிறந்த நடிகராக இருக்கலாம், அதை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு கட்சியை வழிநடத்தும் 'தலைவர்' என்ற தகுதி அவருக்குக் கிடையாது. தன் கட்சியினரையும் தொண்டர்களையும் முறைப்படுத்தும் அடிப்படைத் திறன் அவரிடம் இல்லை."

அமிதாப் பச்சன், அமீர்கான் போன்ற உலகமே போற்றும் நடிகர்கள் கூடப் பொது விமானங்களில் சாதாரண மக்களுடன் பயணிக்கிறார்கள். ஆனால், விஜய் எப்போதும் தனி விமானத்தில்தான் (Private Jet) பறக்கிறார். ஏழை எளிய மக்களோடு தொடர்பில்லாத ஒருவரால் எப்படி மக்கள் தலைவராக முடிவெடுக்க முடியும்?"

தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்து விஜய் முன்னதாகப் பேசியிருந்த கருத்துக்களை இனிகோ விமர்சித்தார் "ரேஷன் கடைகள் எப்படிச் செயல்படுகின்றன? அதன் கட்டமைப்பு என்ன? என்பது கூடத் தெரியாமல் விஜய் எதையோ உளறிக் கொண்டிருக்கிறார். நாட்டின் அடிப்படை எதார்த்தம் தெரியாமல் அரசியலுக்கு வருவது வேடிக்கையானது. அவருக்கு எதைப் பற்றியும் சரியான புரிதல் இல்லை."

நான் இந்தத் தொகுதியின் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தது 50 முறையாவது சென்று மக்களை நேரில் சந்தித்துள்ளேன். அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துள்ளேன். ஆனால், விஜய் இந்தத் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு வெளிஆள்."

விஜய்யின் கட்சியான தவெக-வின் மாவட்டச் செயலாளருக்கே அவருடைய மகனுக்குப் பள்ளியில் இடம் (Admission) வாங்கிக் கொடுத்தது நான்தான். தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கே உதவ முடியாத அல்லது அவர்களைச் சந்திக்காத ஒரு தலைவர் எப்படித் தொகுதி மக்களுக்கு உதவுவார்?"

அதிமுக வேட்பாளர் மற்றும் பிற கட்சிகள் குறித்தும் அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்:

அதிமுக வேட்பாளர் ஒரு கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் என்பதையும் தாண்டி, அவர் மீது கந்து வட்டி தொடர்பான புகார்கள் இருப்பதாகவும், மக்கள் இத்தகைய நபர்களை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்."திருச்சி கிழக்கில் எனக்குச் சமமான போட்டியாளரே எவருமில்லை. அந்தப் பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை, அது நேர விரயம்," எனத் துணிச்சலாகக் குறிப்பிட்டார்.

இறுதியாகத் தனது வெற்றி வாய்ப்பு குறித்துப் பேசிய இனிகோ இளைஞர்களில் ஒரு பகுதியினர் 'நடிப்பு மோகம்' காரணமாக விஜய்யைப் பின்தொடரலாம், ஆனால் வாக்களிக்கும்போது மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்.

தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மே 5-ஆம் தேதிக்குப் பிறகு 'திராவிட மாடல் 2.0' ஆட்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெறுவேன் என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

விஜய் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திருச்சி கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளரின் இந்த அனல் பறக்கும் பேச்சு தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.