"வெற்றி பெற்றால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடுவேன்"காரைக்குடியில் சீமான் பரபரப்பு பேச்சு:

"வெற்றி பெற்றால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடுவேன்: சீமான்

"வெற்றி பெற்றால் நாட்டையே தலைகீழாக மாற்றிவிடுவேன்"காரைக்குடியில் சீமான் பரபரப்பு பேச்சு:

காரைக்குடி: வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டையே தலைகீழாக மாற்றி விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் ஓட்டு சேகரித்து பேசியதாவது: 

கட்சியை நடத்துவதற்கு எங்கிருந்து கட்சிக்குக் காசு வருகிறதா என கேட்கின்றனர் ? நான் சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் யாருமே பணக்காரர்கள் இல்லை. என் மக்கள்தான் எனக்குப் பணம் தருகிறார்கள். மக்கள் இயக்கத்துக்கு மக்கள்தான் தரவேண்டும். நான் மக்களிடம் திரள் நிதி கேட்கிறேன். ரூ.200, 300, 2000, 4000 – அப்படித்தான் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தில்தான் மைக் வாங்கினேன், வாகனம் வாங்கினேன்.அதில் தான் பேசி கொண்டிருக்கிறேன்

நான் என் மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்தேன்.நான் மக்களுக்காக வெயிலில் காய்கிறேன். இதை விட மே மாதத்தில் ஆடு, மாடுகளுக்காக வெயிலில் காய்ந்தவன் தான். அதெல்லாம் புதியது அல்ல.உங்களிடம் இருந்து உங்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால், உங்களை ஏமாற தயாராக இல்லை. 

 இந்த காரைக்குடியில் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், இந்த தொகுதிக்கு அரசு, நிதி ஒதுக்கி பணி செய்ய வைக்கிறதோ இல்லையா, ஆனால், உலகம் முழுவதும் உள்ள 13 கோடி தமிழ் மக்கள் பணம் தருவார்கள். சிதம்பரம் இந்த தொகுதியில் எத்தனை முறை வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகியுள்ளார் என்று.யாருக்காவது காரைக்குடி தெரியுமா?

நான் இன்றும் வெற்றி பெறவில்லை.இப்போது தான் நிற்கிறேன். ஆனால், உலகத்தில்காரைக்குடி தெரியாத நபர் யாராவது இருக்கிறாராஉலகமே ஒரே ஒரு தொகுதியை குறிவைத்துள்ளது.ஒரு தொகுதியில் ஒருவரின் வெற்றிக்காக காத்திருக்கிறது

உனது மகனின் வெற்றிக்காக. 15 ஆண்டுகளாக முச்சத்தியில் வீதியில், மக்கள் போராட்டத்தில் பிரச்னைக்காக நின்று பேசி உள்ளேன். சட்டசபையில் பேச வேண்டும். அரசு எனக்கு என்ன காசு தருகிறது. நான் வெற்றி பெற்றால், ஆட்சி அமைத்தால் நாட்டை தலைகீழாக மாற்றி விடுகிறேன்.

வேறு நாடு. இந்த அரசு எனக்கு காசு தர வேண்டியது இல்லை. எனது மக்கள் எனக்கு தருவார்கள். எனது குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, மருத்துவம், நல்ல வாழ்க்கை, பசி பஞ்சம் இல்லாத வாழ்க்கை. இதற்காக வெற்றி பெற்று நாட்டை கைப்பற்ற வேண்டும். 

மீண்டும் சொல்கிறேன் – உதயசூரியனுக்கோ, கைக்கோ, இரட்டை இலைக்கோ ஓட்டுப் போட்டால்... எந்தச் சாமியிடமும் பரிகாரமும் இல்லை, மன்னிப்பும் இல்லை. என்னுடைய பாவமும் இருக்கிறது என சீமான குறிப்பிட்டார்