இந்திய சட்டமன்றத் தேர்தல்கள்: வாக்காளர் பங்கேற்பில் வரலாற்றுச் சாதனை
இந்திய சட்டமன்றத் தேர்தல்கள்: வரலாற்றுச் சாதனை
மேற்கு வங்காளம்: 90% மேல் வாக்குப்பதிவு
தமிழ்நாடு வரலாற்றில் உயர்ந்த வாக்குப்பதிவு
தமிழ்நாடு 84.5%–85% வரை வாக்குப்பதிவு
இந்தியாவில்(23 )நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். மக்களின் இந்த அதிக பங்கேற்பு, நாட்டின் ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 92% வரை வாக்காளர் வருகை பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் 90% க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்களின் ஆர்வம் கணிசமாக அதிகமாக இருந்தது.
பாதுகாப்பு படைகள் விரிவாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சில இடங்களில் சிறிய பதற்றங்கள் ஏற்பட்டபோதிலும், மொத்தத்தில் தேர்தல் செயல்முறை அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநிலத்தில் சுமார் 84.5%–85% வரை வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது. இது மாநில வரலாற்றில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும். பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் அதிகளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கரூர் மாவட்டம் – 92.6 (அதிகபட்சம்)
சென்னை – 84% (வரலாற்றிலேயே அதிகம்)
கொளத்தூர் (மு.க. ஸ்டாலின்) 86%
எடப்பாடி (எடப்பாடி கே பழனிசாமி) – 92%
பெரம்பூர் (விஜய்) – 90%
முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு கவனம் ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் போட்டியிட்ட பெரம்பூரிலும் குறிப்பிடத்தக்க வாக்காளர் வருகை பதிவாகியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்திற்குப் பிறகு 5.73 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் அதிக ஈடுபாடு இந்த உயர்ந்த வாக்குப்பதிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த தேர்தலை விட சுமார் 9% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட விரிவான ஏற்பாடுகள், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவை இந்த அதிக வாக்குப்பதிவிற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. பதிவான
பங்கேற்பு குறித்து அரசியல் தரப்புகளும் கருத்து வெளியிட்டுள்ளன. மேற்கு வங்காள முதல்வர் பானர்ஜி மக்கள் ஆதரவு தங்களது ஆட்சிக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிக வாக்காளர் வருகை ஜனநாயகத்தின் வலிமையை மக்களின் அரசியல் விழிப்புணர்வையும் தெளிவாக வெளிப்படுத்துவதாகவும், மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Editor