நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சொத்து அறிவிப்பு – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
நாதக வேட்பாளர்கள் சொத்து அறிவிப்பு –
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செயல்முறை நாளை (6ஆம் தேதி) நிறைவடைகிறது.
வாக்குப்பதிவுக்கு முன்பே, எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து உள்ளது, யார் அதிகம், யார் குறைவாக வைத்துள்ளனர் என்பது குறித்து மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு முன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் பரவலாக பேசப்பட்டன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி (நாதக) சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான சீமான், இடும்பாவனம் கார்த்தி மற்றும் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
சீமான் (காரைக்குடி):
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிரமாணப் பத்திரத்தில், கையில் ரூ.50,000 பணமும், ரூ.39 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 150 கிராம் தங்கம் இருப்பதாகவும், வங்கியில் ரூ.5,11,000 கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடும்பாவனம் கார்த்தி (நாகப்பட்டினம்):இவர் தனது கையில் ரூ.30,000 மட்டுமே இருப்பதாகவும், வங்கிக் கணக்குகளில் ரூ.16,084 மற்றும் ரூ.51,237 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம், வாகனம், வீடு அல்லது எந்த அசையா சொத்துகளும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்யாராணி (மேட்டூர்)
வீரப்பன் மகளான வித்யாராணி தனது சொத்து விபரங்கள் கையில் ரூ.1.31 லட்சம் பணமும், வங்கிக் கணக்குகளில் ரூ.24,120 மற்றும் ரூ.1,000 இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 40 கிராம் தங்கம் (மதிப்பு ரூ.5.42 லட்சம்) கொண்டுள்ள அவர், மொத்தமாக ரூ.6,98,120 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் வைத்துள்ளார். வங்கியில் ரூ.3.50 லட்சம் கடனும் இருப்பதாகவும், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளிவருவது, அரசியல் வெளிப்படைத்தன்மைக்கு உதவுவதோடு, வாக்காளர்களுக்கும் ஒரு தெளிவான பார்வையை வழங்குகிறது. இந்த தகவல்கள் வாக்காளர்களின் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் வெளிப்படும்.
Editor