விஜய் சொத்து மதிப்பு: ரூ.600 கோடி! அரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார்

விஜய் சொத்து மதிப்பு: ரூ.600 கோடி!

விஜய் சொத்து மதிப்பு: ரூ.600 கோடி! அரசியலுக்காக  சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ.600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான விஜய், ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.220 கோடி வரை சம்பளமாகப் பெற்று வருகிறார்.

அவரது கடைசிப் படமான 'ஜனநாயகன்' (இயக்கம்: ஹெச். வினோத்) மட்டுமே ரூ.220 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழுநேர அரசியலுக்காக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார் விஜய்.

விஜய், தனது வருமானத்தில் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். சென்னை நீலாங்கரையில் அவர் வசித்து வரும் பங்களாவின் மதிப்பு ரூ.80 கோடியாகும்.

விஜய் வைத்திருக்கும் வாகனங்களின் மதிப்பும் கோடிகளில் கணக்கிடப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்: ரூ.7 கோடி 3 பிஎம்டபிள்யூ கார்கள் லெக்சஸ், வோல்வோ, ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர், போர்டு கார்கள்

இவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையையும் துறந்து, மக்களுக்காகத் தான் வந்திருப்பதாக விஜய் சமீபத்தில் நடந்த தவெக கூட்டத்தில் தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.

முதல் தேர்தலிலேயே பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் தேர்தலில் 'விசில்' சின்னத்தில் வாக்களிக்குமாறு ஜெனரல் Z இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் தொடங்கி, தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த விஜய், தற்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்டுள்ளார். எனினும், ரசிகர்கள் அவர் நிச்சயம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள்.

'ஜனநாயகன்' படம், சென்சார் சான்று பிரச்சனை காரணமாக ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.