சிறையில் இருந்தே வேட்புமனு: 'நகை ஜாம்பவான்' ஹரி நாடாரின் சொத்து மதிப்பு ரூ.25.76 கோடி
சிறையில் இருந்தே வேட்புமனு: 'நகை ஜாம்பவான்' ஹரி நாடார்
2026 சட்டமன்றத் தேர்தலில், சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள வேட்பாளர் ஒருவர், சிறையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஹரி நாடார், தனது பிரமாணப் பத்திரத்தில் மொத்தம் ரூ.25.76 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார், 'மினி நகைக்கடை' போன்ற தோற்றத்தால் பிரபலமானவர். 'ராக்கெட் ராஜா'வின் 'பனங்காட்டுப் படை' அமைப்பின் மூலம் அறியப்பட்ட இவர், முன்பு ஹெலிகாப்டரில் பிரச்சாரம் செய்து கவனத்தை ஈர்த்தவர். இம்முறை, சிறைச் சூழலிலேயே தனது மூன்றாவது தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
த்து மதிப்பு மற்றும் தங்கக் குவியல் ஹரி நாடார் தனது பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துகளைக் குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
மொத்த சொத்து மதிப்பு: தோராயமாக ரூ.25.76 கோடி (இவரது சில ஆவணங்களில் ரூ.26.76 கோடியாகவும் உள்ளது).அசையும் சொத்துகள்: ரூ.26.76 கோடி.அசையா சொத்துகள்: ரூ.12 லட்சம்.
'நகை ஜாம்பவான்' என்று அழைக்கப்படும் இவரின் முக்கிய சொத்து தங்கமே ஆகும். இவர், தன்னிடம் 11 கிலோ 650 கிராம் (11.650 கிலோ) தங்க நகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.17 கோடியே 6.84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாகனங்கள் மற்றும் வருமான வரி வாகனங்கள்: இவருக்கு ஃபார்ச்சூனர், இன்னோவா கிரிஸ்டா, டாடா சபாரி, மகேந்திரா எஸ்யூவி உள்ளிட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. வருமான வரி: கடந்த 2020-21-ம் நிதியாண்டில் மட்டும், வருமான வரியாக ரூ.1.52 கோடி செலுத்தியுள்ளார். அதன்பிறகு சிறையில் இருந்ததால், அவரால் வருமான வரி செலுத்த முடியவில்லை.
ஹரி நாடாருக்கு அரசியல் வாழ்க்கையைப் போலவே, குற்ற வழக்குகளும் அதிகம். அவர் மீது மூன்று மாநிலங்களில் மொத்தம் 24 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 9 மோசடி வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
சமீபத்தில், ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.70 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், போலி பேங்க் டிராஃப்ட்களைப் பயன்படுத்தி மோசடி நடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2019-ல் நாங்குநேரி இடைத்தேர்தலில் 4,243 வாக்குகளும், 2021-ல் ஆலங்குளம் தொகுதியில் 37,727 வாக்குகளும் பெற்ற ஹரி நாடார், 2026 தேர்தலிலும் ஆலங்குளத்தில் போட்டியிடுகிறார். சிறையில் இருந்தாலும், சிறைக் காவலர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று, முகவர்கள் மூலம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
Editor