பால் மா விலை உயர்வு - 400 கிராமுக்கு 50 ரூபாய், 1 கிலோவுக்கு 125 ரூபாய் அதிகரிப்பு !

பால் மா விலை உயர்வு - 400 கிராமுக்கு 50 ரூபாய், 1 கிலோவுக்கு 125 ரூபாய் அதிகரிப்பு !

பால் மா விலை உயர்வு - 400 கிராமுக்கு 50 ரூபாய், 1 கிலோவுக்கு 125 ரூபாய் அதிகரிப்பு !

இறக்குமதி செய்யப்பட்ட பால் மாயின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம்  செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும் போது, 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 50 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் பால் மா பாக்கெட்டின் விலை 125 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

நிலவும் சந்தை நிலவரங்களையும், பரிமாற்ற வீத நிலைமைகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இன்று (20) முதல் பொதியிடப்படும் பால் மா பாக்கெட்டுகளின் விலை இவ்வாறு உயரவுள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த வாரத்தில் தொடர்புடைய விலைகளின் கீழ் இறக்குமதி பால் பொடி சந்தைக்கு வெளியிடப்படும். தற்போது சந்தையில் காணப்படும் எந்தவொரு இறக்குமதி பால் மா வகையின் விலையும் உயராது என்று பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் மேலும் தெரிவித்தது.

இதேவேளை, ரூபாய் மதிப்புக் குறைந்து, டொலரின் விலை தொடர்ந்து உயர்வதுடன், எதிர்காலத்தில் பல இறக்குமதிப் பொருட்களின் விலையும் உயரும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவிக்கிறது.

அச்சங்கத்தின் செயலாளர் திரு. சுப்ரமணியம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அதன்படி எதிர்காலத்தில் சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரும் என்று குறிப்பிட்டார்.