பொய்ப் பிரசாரத்தால் ஆட்சி கவிழாது — அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பொய்ப் பிரசாரத்தால் ஆட்சி கவிழாது

பொய்ப் பிரசாரத்தால் ஆட்சி கவிழாது — அமைச்சர் பிமல் ரத்நாயக்க

எமது அரசின் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பொய்களையும் பரப்பி வருகின்றனர்.

என்று ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவி்த்தார்.

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்ஷவின் தரப்பினரும் பகற்கனவு காண்கின்றனர் என்று ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர்களின் இந்தக் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுகின்றனர்.என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுகின்றனர்.

மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் தூய்மையான நிர்வாகத்துக்காகப் பாடுபட்டு வரும் எமது அரசுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

எமது அரசானது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்  பலத்தைக் கொண்ட, மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு பலமிக்க அரசாகும். ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை எந்தவொரு அரசியல் சக்தியாலும், பொய்ப் பிரசாரங்களாலும் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது வேடிக்கையானது. எமது அரசு தூய்மையான பயணத்தை எவ்வித தடங்கலுமின்றித் தொடரும்." - என்றார்