எயார்பஸ் கொள்வனவு விசாரணை: மஹிந்த ஆணைக்குழு முன் ஆஜராகத் தயார்!

ஏர்பஸ் கொள்வனவு விசாரணை!

எயார்பஸ் கொள்வனவு  விசாரணை: மஹிந்த ஆணைக்குழு முன் ஆஜராகத் தயார்!

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த ஒப்பந்தம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்சம்  ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கடிதம் மூலம் எதிர்வரும் 12ஆம் தேதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்திருந்தது..

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்ருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை ஏற்று, அதற்கான தேதியில் ஆஜராக தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

விசாரணையின் போது, இந்த பரிவர்த்தனையில் தாம் பெற்ற 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன நீதிமன்றில் தெரிவித்ததாக லஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

எனினும், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன ஆட்சேபம் தெரிவித்து, லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமது வாடிக்கையாளரை மிரட்டி வாக்குமூலங்களைப் பெற்றிருப்பதாகக் கூறி நீதிமன்றில் சத்தியகடதாசி ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.