20 ஓவர் உலகக்கிண்ணம்: சூப்பர் 8 சுற்றில் இலங்கை - இங்கிலாந்து மோதல்

T20 World Cup

20 ஓவர் உலகக்கிண்ணம்: சூப்பர் 8 சுற்றில் இலங்கை - இங்கிலாந்து மோதல்

20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இதேவேளை, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி நேற்று (21) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்தது. அதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பெய்த மழை காரணமாக அந்தப் போட்டியை கைவிட போட்டி நிர்வாகிகள் தீர்மானித்தனர். அதன்படி, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.