இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம்

அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்  கெரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இரண்டு வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் தனது பொறுப்புகளை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த  சனத் ஜயசூரிய அவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேற்கொண்டிருந்தது.

கெரி கேர்ஸ்டன் சர்வதேச கிரிக்கெட் உலகில் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளராகக் கருதப்படுகிறார். அவர் பயிற்றுவித்த India national இந்திய தேசிய கிரிக்கெட் அணி,2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணம் போட்டியில் உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர்  தென்னாப்பிரிக்க தேசிய கிரிக்கெட் அணி உள்ளிட்ட பல சர்வதேச அணிகளுக்கு ஆலோசகராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். வீரர்களின் திறன் மேம்பாடு, அணியின் மனவலிமை வளர்ச்சி மற்றும் நீண்டகால அணித் திட்டங்களை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சமீப காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டுவரும் இலங்கை அணியை மீண்டும் வலுவான அணியாக மாற்றும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்கும் கெரி கேர்ஸ்டன் தலைமையில், வரவிருக்கும் சர்வதேச தொடர்களில் இலங்கை அணி புதிய திட்டங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.