இந்திய ஊடகங்களின் கிண்டல், பாகிஸ்தானின் சமாதான முயற்சியை குழப்புமா?
இந்திய ஊடகங்களின் கிண்டல், பாகிஸ்தானின்
*நிரந்தர போர் நிறுத்தத்தை ட்ரம்ப் விரும்புகிறார்...
*இந்தியா முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் ஜாவேத் ஹாசன்.
*பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் முயற்சி...
--- --- ---
அமெரிக்க - ஈரான் சமாதான பேச்சு விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து இந்த அனுசரணையாளராக (Facilitator) தீவிரமாக செயற்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், ஈரான் சென்று பேச்சு நடத்துகிறார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியா, கட்டார் நாடுகளுக்கும் சென்று போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையும் நடத்துகிறார்...
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நனரில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்
அதேவேளை, ஏப்ரல் 8 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம், ஏப்ரல் 21 ஆம் திகதி முடிவடைவடைவதற்குள், நிரந்தர ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வற்புறுத்தி வருகிறது.
பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும் என்பதும் ஈரானின் பலமான கோரிக்கை.
இதேவேளை, பாகிஸ்தானின் அனுசரணை முயற்சியை இந்திய ஊடகங்கள் கிண்டல் செய்தமை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானின் சமாதான முயற்சிகளை "நாடகம்" என்று கிண்டல் செய்ததை ஒரு "வருந்தத்தக்க காட்சி" (Sad spectacle) என்று த எக்ஸ்பிறஸ் ரிபூன் (The Express Tribune) என்ற பாகிஸ்தான் நாளிதழ் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தானின் சமாதான முயற்சியை சிதைக்கும் நோக்கில் இந்திய தொலைக்காட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாக ஜியோ நியூஸ் (Geo News) குற்றம் சுமத்தியுள்ளது.
சுவீடன்உப்சலா பல்கலைக்கழகப் பேராசிரியர் பேராசிரியர் அசோக் ஸ்வைன் (Ashok Swain) பாகிஸ்தானின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடும் இந்திய ஊடகங்களின் போக்கை "ஒரு நகைச்சுவை" (Joke) என்று விமர்சித்துள்ளார்.
ஜாவேத் ஹாசன் (Javed Hassan) என்ற பொருளாதார நிபுணர், சமாதான முயற்சி தோல்வியடைய வேண்டும் என இந்திய ஊடகங்கள் விரும்புவது போல் காட்டுவது நாகரிகமானது அல்ல என்று குறை கூறியுள்ளார்.
இந்தியா "முதிர்ச்சியடைய வேண்டும்" (Grow up, India) என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் இராஜதந்திர ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்போது, இந்தியா ஓரம் கட்டப்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி (BBC) உலக செய்திச் சேவை அவசியமற்ற கவலையை வெளியிட்டிருக்கிறது.
ஆகவே, பாகிஸ்தானின் சமாதான முயற்சி தொடர்பான செய்திகளின் நம்பகத் தன்மையை உடைத்தல், பரபரப்பை (Sensationalism) ஏற்படுத்தல் போன்ற இந்திய ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான செயற்படுகள் பற்றி, இந்திய ஊடக அமைப்புகள் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்
Editor