தமிழ் அரசியல்வாதிகளின் இன அவதூறு பேச்சுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்”

தமிழ் அரசியல்வாதிகளின் இன அவதூறு பேச்சுகளைக் ஆர்ப்பாட்டம்”

தமிழ் அரசியல்வாதிகளின்  இன அவதூறு  பேச்சுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்”
தமிழ் அரசியல்வாதிகளின்  இன அவதூறு  பேச்சுகளைக் கண்டித்து மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்”

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பிரதேச, இன இழிவுபடுத்தல், வெறுப்புக் குற்றப் பேச்சுக்களை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவில் மார்ச் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.

சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை ‘நாய்கள்’ என இழிவுபடுத்தியது உட்பட, தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்து வெறுப்புத் தூண்டும் பேச்சுக்களைப் பேசிவருவதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “தமிழ் அரசியல்வாதிகளே! இன வேறுபாடுகள் பார்க்காதீர்கள், அவதூறு பேசாதீர்கள்”, “அரசியல்வாதிகளே! இன இழிவுபடுத்தல், வெறுப்புக் குற்றப் பேச்சுக்களை நிறுத்துங்கள்”, “இனம், மதம் பார்க்காதீர்கள்”, “நாடாளுமன்றத்தில் மக்கள் அபிவிருத்தி தொடர்பாகப் பேசுங்கள்”, “மக்களின் பிரச்சினைகளைப் பேசுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

“தமிழ் அரசியல்வாதிகளே! உங்கள் பிரதேச, இன இழிவுபடுத்தல், வெறுப்புக் குற்றப் பேச்சுகளை உடனடியாக நிறுத்துங்கள். நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளைப் பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்துத் தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்குப் பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் கருத்துகளை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை. நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதனைச் சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் எங்களது உறுதியான எதிர்ப்பு தொடரும்” எனக் குறிப்பிடப்பட்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,பிரதமர்,சபாநாயகர் நாடாளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான அனுப்பவதற்கான மனு ஒன்றும் வாசிக்கப்பட்டது.

கனகராசா சரவணன்