அமைச்சர் லால்கந்த ஹிரு தொலைக்காட்சி மீது வழக்கு தாக்கல்
அமைச்சர் லல்கந்த ஹிரு மீது வழக்கு தாக்கல்
ஹிரு தொலைக்காட்சி மற்றும் ஆசியா ஒளிபரப்பு கார்ப்பரேஷனுக்கு எதிராக ரூ.100 கோடி (ரூ.1,000 மில்லியன்) இழப்பீடு கோரி விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லல்கந்த, இடைக்கால வழக்கு (Interlocutory Suit) தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புத்திக விஜேசூரிய, கூறுகையில் — தனது கட்சிக்காரர் சமர்ப்பித்த சொத்து மற்றும் கடன் அறிக்கையை தவறாகப் புரிந்துகொண்டு ஹிரு தொலைக்காட்சி பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் செய்தியை ஒளிபரப்பியதாக சுட்டிக்காட்டினார்.
2026 ஏப்ரல் 16 அன்று, "அமைச்சர் லல்கந்தவிடம் 46 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன" என்று ஹிரு செய்தி ஒளிபரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மகளுக்குச் சொந்தமான, மதிப்பு சுமார் ரூ.1,43,000 மட்டுமே உள்ள பங்குகளை, வேண்டுமென்றே ரூ.38 கோடியே 39 லட்சம் (ரூ.38,39,06,705.40) மதிப்புள்ள பத்திரங்களாக (Securities) தவறாக விளம்பரப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு முன்பு ஹிரு தொலைக்காட்சி அமைச்சரிடம் எந்தவித விளக்கமும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "அமைச்சர் லல்கந்தவிடம் 46 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்" என்ற தலைப்புகளுடன் அமைச்சரின் படத்தையும் பயன்படுத்தி டிஜிட்டல் ஊடகங்களிலும் இந்தத் தவறான தகவலை பரப்பியதன் மூலம் அவரது அரசியல் மற்றும் தொழில்முறை நற்பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக வழக்கறிஞர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தால் பொது சொத்தாக வழங்கப்பட்ட ஒளிபரப்பு உரிமத்தை குறுகிய தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்வதாகத் தெரிவதால், சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்யுமாறு தொடர்புடைய அதிகாரிகளிடம் மனு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் புத்திக விஜேசூரிய மேலும் தெரிவிக்கையில், ஏழு நாட்களுக்குள் குறிப்பிட்ட இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். என lankacnews செய்தி வெளிட்டிருந்தது
Editor