பண்டிகைக் காலம்: பெட்ரோலுக்கு QR குறியீடு நீக்கம் டீசலுக்கு QR தொடரும்
பண்டிகைக் காலம்: பெட்ரோலுக்கு QR குறியீடு நீக்கம் டீசலுக்கு QR தொடரும்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு (ஏப்ரல் 11) முதல் எதிர்வரும் 18ஆம் தேதி நள்ளிரவு வரை பெட்ரோல் வாங்குவதற்கான QR குறியீட்டு முறைமை தற்காலிகமாக நீக்கப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில் QR இன்றி பெட்ரோல் வாங்கலாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒற்றை-இரட்டை வாகனப் பதிவெண் முறை கடுமையாக அமல்படுத்தப்படும். அதாவது, ஒற்றை இலக்கத்தில் முடியும் பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்கத்தில் முடியும் பதிவெண் கொண்ட வாகனங்கள் அடுத்த நாளுமாக மாற்றி மாற்றி மட்டுமே பெட்ரோல் பெற அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், டீசல் விநியோகத்துக்கான தற்போதைய QR முறைமையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை; அது முன்பு இருந்ததுபோலவே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியது.
Editor