புத்தாண்டுக்குப் பின் கொழும்பு பேருந்து பற்றாக்குறை.. ஊடகவியலாளர்கள் கைது..
புத்தாண்டுக்குப் பின் கொழும்பு பேருந்து பற்றாக்குறை..
புத்தாண்டு விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பும் பயணிகள் கடுமையான பேருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்
சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மத்திய மலைப்பகுதி தோட்டங்களுக்குச் சென்ற மக்கள், இன்று (ஏப்ரல் 18) தங்கள் பணியிடங்களுக்குத் திரும்புவதற்கு கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று அதிகளவிலான பயணிகள் குவிந்தனர். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
இதுகுறித்து ஹட்டன் லங்கம பணிமனை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், வேறு பணிமனைகளுக்கு சொந்தமான சில பேருந்துகளும் நண்பகலுக்குள் வந்து சேரும் எ
இந்நிலையில், நுவரெலியா பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையில் ஏற்பட்ட இடையூறு காரணமாக பொதுமக்கள் வெளிப்படுத்திய அதிருப்தியை செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்களை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்து நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். தங்கள் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
பின்னர், நுவரெலியா தலைமையக பொலிஸ் பிரதம அதிகாரியின் தலையீட்டைத் தொடர்ந்து அந்த ஊடகவியலளர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
Editor