மத்திய கிழக்கில் அமெரிக்க ராடர்கள் அழிந்தன.

அமெரிக்க ராடர்கள் அழிந்தன.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராடர்கள் அழிந்தன.

*அறிக்கையை தொடர்ந்து புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள்!

*தென்கொரியாவில் இருந்து ஏற்பாடு...

மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் குறிப்பாக ராடர்கள், ஈரான் தாக்குதலில் அழிக்கப்பட்டதால், வானில் எதிரிகளின் ஏவுகணைகள் இலக்கை அடையும் முன், அவற்றை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் வல்லமை கொண்ட (The Terminal High Altitude Area Defense - THAAD) ஏவுகணைகளை அமெரிக்கா நகர்த்தி வருகிறது.

ராடர்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான அறிக்கை வெளியான பின்னர் அமெரிக்கா இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கல்ப் நியூஸ் (gulfnews) செய்தி வெளியிட்டுள்ளது.  

அமெரிக்காவின் வோசிங்டன் போஸ்ட் (The Washington Post) அறிக்கையை வெளியிடடிருந்தது. 

இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி இந்த ஏவுகணைகள் நகர்த்தப்பட்டு வந்தாலும். சில நாட்களாக தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்கிற்கு மீண்டும் அதிவேகமாக அமெரிக்கா நகர்த்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான தீவிரமான மோதலின் போது பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஏவுகணை நகர்த்தப்பட்டுள்ளது.

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலின் முதல் இரண்டு நாட்களில் அமெரிக்கா $5.6 பில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகளை இழந்துள்ளது. 

ஈரான் தாக்குதலில் கடுமையான போர் இழப்புகளைச் சந்தித்ததே இந்த மறு விநியோகத்திற்கான காரணம் என்று, சீன இராணுவ நிபுணரான சோங் சோன்ங்பிங் (Song Zhongping) விமர்சித்துள்ளதாக குளோபல் ரைமஸ் (Global Times) தெரிவித்துள்ளது. 

அமெரிக்க இராணுவ தளங்களை கூட சரியாக பாதுகாக்க முடியாவிட்டால், ஈரானின் தாக்குதலில் இருந்து அரபு நாடுகளை அமெரிக்கா, எவ்வாறு பாதுகாக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்