வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வாகன உரிமையாளர்களுக்கு செய்தி
இலங்கை பெட்ரோலிய சட்டபூர்வ கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கியூஆர் குறியீட்டின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் புதிய அறிவிப்பின் படி, பல்வேறு வகை வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடுகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன
கார்கள்: 15 லிட்டரிலிருந்து 25 லிட்டராக அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகள்: 15 லிட்டரிலிருந்து 20 லிட்டராக அதிகரிப்பு
வேன்கள்: 40 லிட்டரிலிருந்து 50 லிட்டராக அதிகரிப்பு
மோட்டார் சைக்கிள்கள்: 5 லிட்டரிலிருந்து 8 லிட்டராக அதிகரிப்பு
பேருந்துகள்: 60 லிட்டரிலிருந்து 100 லிட்டராக அதிகரிப்பு
இந்த மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சரக்குந்துகளுக்கு வழங்கப்படும் 200 லிட்டர் கொள்ளளவும், சிறப்புப் பயன்பாட்டு வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லிட்டர் கொள்ளளவும் திருத்தி அமைக்கப்படாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
Editor