இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கை வருகின்றார்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கை வருகின்றார்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 19 ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக இலங்கை வருகை தருகின்றார். இவ்விஜயத்தின்போது அவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மேலும், முல்லைத்தீவு, தெனியாய மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள மூன்று மருத்துவமனைத் திட்டங்கள் உள்ளிட்ட இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும் அவர் பார்வையிடுவார் என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ் மற்றும் மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் இந்தியத் துணை ஜனாதிபதி சந்திப்புகளை நடத்தவுள்ளார்.