IPL 2026: சூப்பர் கிளாஷ் போட்டிகளின் அதிகாரப்பூர்வ கால அட்டவணை
IPL 2026: சூப்பர் கிளாஷ் போட்டிகளின் அட்டவணை
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் 2026 (IPL) தொடர் மார்ச் 28)முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த சீசனை முன்னிட்டு பல புதிய மாற்றங்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி களமிறங்க தயாராகியுள்ளது.
அணியில் புதிய மாற்றங்கள்
இந்த முறை CSK அணியின் முக்கிய பலம் அதன் சமநிலை கொண்ட பேட்டிங் வரிசையாகும். இளம் திறமைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இணைந்துள்ள இந்த அணியில்,
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணியை வழிநடத்தப்பட உள்ளது. அவருடன்
எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் பிரேவிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இணைந்துள்ளனர்.
மேலும், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், நூர் அகமது, கலீல் அகமது, ஜேமி ஓவர்டன் உள்ளிட்டோர் அணியின் வலிமையை அதிகரிக்கின்றனர். இவர்களில் பலர் ஆரம்ப லெவனில் இடம்பெறுவது உறுதியாக பார்க்கப்படுகிறது.
CSK அணியின் லீக் போட்டி அட்டவணை
மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs CSK – குவஹாட்டி
ஏப்ரல் 3 – பஞ்சாப் கிங்ஸ் vs CSK – சென்னை
ஏப்ரல் 5 – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs CSK – பெங்களூரு
ஏப்ரல் 11 – டெல்லி கேபிடல்ஸ் vs CSK – சென்னை
ஏப்ரல் 14 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs CSK – சென்னை
ஏப்ரல் 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs CSK – ஹைதராபாத்
ஏப்ரல் 23 – மும்பை இந்தியன்ஸ் vs CSK – மும்பை
ஏப்ரல் 26 – குஜராத் டைட்டன்ஸ் vs CSK – அகமதாபாத்
மே 2 – மும்பை இந்தியன்ஸ் vs CSK – சென்னை
மே 5 – டெல்லி கேபிடல்ஸ் vs CSK – டெல்லி
மே 10 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs CSK – சென்னை
மே 15 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs CSK – லக்னோ
மே 18 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs CSK – சென்னை
மே 21 – குஜராத் டைட்டன்ஸ் vs CSK – சென்னை
எதிர்பார்ப்பு அதிகம்
இந்த சீசனில் CSK அணி சமநிலை கொண்ட அணியாக இருப்பதால், பிளேஆஃப் வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அனுபவமும் இளமைமும் இணைந்துள்ள இந்த அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைமையின் கீழ், CSK மீண்டும் கோப்பையை வெல்லுமா? கிரிக்கெட் உலகின் கண்கள் தற்போது அந்த அணியையே நோக்கி உள்ளது.
Editor