ஐபிஎல் 2026: சிஎஸ்கேக்கு பின்னடைவு – ஸ்பென்சர் ஜான்சன் தாமதமாக இணைவு
ஐபிஎல் 2026: ஸ்பென்சர் ஜான்சன் தாமதமாக இணைவு
சென்னை: IPL 2026 தொடரின் தொடக்கப் போட்டிகளில் Chennai Super Kings (சென்னை சூப்பர் கிங்ஸ்) அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் Spencer Johnson (ஸ்பென்சர் ஜான்சன்), முதல் கட்டப் போட்டிகளில் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக Nathan Ellis (நாதன் எல்லிஸ்) தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், அவர் ஏப்ரல் 21 முதல் 23 ஆம் தேதிக்குள் தான் அணியுடன் இணைவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பென்சர் ஜான்சன் முன்பு Gujarat Titans மற்றும் Kolkata Knight Riders அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.
இந்நிலையில், ஜான்சனின் உடல்நிலை குறித்து தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் Ryan Harris (ரியான் ஹாரிஸ்) விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்ட ஜான்சன் தற்போது காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், மீண்டும் பந்துவீச்சு பயிற்சியைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டித்தரத்திற்குத் திரும்புவதற்கு முன் ஜான்சன் போதுமான அளவு பந்துவீசிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், அவரது பந்துவீச்சு முறையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் ஹாரிஸ் கூறினார்.
ஜான்சன் அணியில் இணையும் வரை, நியூசிலாந்து வீரர் Matt Henry மற்றும் இங்கிலாந்து வீரர் Jamie Overton உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து தாக்குதலை முன்னெடுப்பார்கள். அவர்களுக்கு Khaleel Ahmed, Mukesh Choudhary உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ஸ்பென்சர் ஜான்சன் தாமதமாக இணைவது, ஐபிஎல் 2026 தொடக்க கட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு திறனை பாதிக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
Editor