அமெரிக்க இராணுவம் பற்றி தகவல்கள் - சீன நிறுவனங்கள் ஈரானுக்கு விற்பனை செய்கிறதா?

அமெரிக்க இராணுவம் பற்றி தகவல்கள் - சீன தனியார் நிறுவனங்கள் ஈரானுக்கு

அமெரிக்க இராணுவம் பற்றி தகவல்கள் - சீன  நிறுவனங்கள் ஈரானுக்கு விற்பனை செய்கிறதா?
அமெரிக்க இராணுவம் பற்றி தகவல்கள் - சீன  நிறுவனங்கள் ஈரானுக்கு விற்பனை செய்கிறதா?

* ஆங்கில ஊடகம் குற்றச்சாட்டு 

* பீஜிங் நிலைப்பாடு என்ன?

சீனாவின், சில இராணுவ தொழில்நுட்ப தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துக்கு, அமெரிக்க இராணுவ நடமாட்டங்கள் பற்றிய உளவுத் தகவல்களை விற்பனை செய்வதாக வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) குறறம் சுமத்தியுள்ளது. 

அமெரிக்க செய்தி நிறுவனமான. வோசிங்டன் போஸ்ட் இது பற்றிய ஆய்வுச் செய்தியை இன்று சனிக்கிழமை பிரசுரித்துள்ளது. 

அமெரிக்கத் தாக்குதல்அ செயற்பாடுகளை, ஈரான் வெற்றிகரமாக முறியடிக்கும் சில உத்திகளுக்கு ஏற்ற தகவல்கள் - உளவு விடயங்கள் ஆகியவற்றை சில, சீன தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவ தலைமைக்கு நாளுக்கு நாள் விற்பனை செய்து வருகின்றன. 

இந்த நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துடன் நல்ல தொடர்பில் உள்ளன. இதன் காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிரக்கப் படைகளின் நகர்வுகள் பற்றிய விரிவான உளவுத் தகவல்கள் பரிமாற்றப்படுவதாக அச் செய்தி ஆய்வு கூறுகிறது. 

அதேவேளை, ஈரான் இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் விடயத்தில் பீஜிங், அதாவது சீன அரசாங்கம் தூர விலகி நிற்பதாகவும், இருந்தாலும், சீன இராணுவத் தலைமைக் கட்டமைப்புக்கு அனைத்தும் நன்கு தெரியும் எனவும் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்