ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ‘தி டைம்ஸ்’

புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ‘தி டைம்ஸ்’

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில்  காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தூதரகக் குறிப்பொன்றை மேற்கோள் காட்டி  ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

 ஈரானின் உச்சத் தலைவர் தலைமறைவாகியுள்ளதாகச் செய்திகள் வந்த நிலையில், அவரது இருப்பிடம் வெளிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகவல் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களுக்கு அண்மை நாட்களில் தான் தெரியவந்துள்ளதாகவும், பொதுவெளியில் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கோம் நகரின் முக்கியத்துவம்: தெஹ்ரானுக்குத் தெற்கே 87 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள கோம் நகரம், ஷியா இஸ்லாத்தில் புனிதமானதாகவும், இஸ்லாமியக் குடியரசின் மதத் தலைநகராகவும் கருதப்படுகிறது.

இதனிடையே, மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா கமேனியின் உடலை கோமில் அடக்கம் செய்யத் தயாராகி வருவதாக ‘த டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.