இஸ்ரேல் பிரதமர் விவகாரம்: வதந்தியா? உண்மையா?
இஸ்ரேல் பிரதமர் விவகாரம்
*பின்னூட்டங்கள் கேள்விகளை எழுப்புகின்றன.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு Benjamin Netanyahu) பதிலாக இடைக்காலப் பிரதமராக இஸ்ரேல் துணைப் பிரதமர் யாரிவ் லெவின் (Yariv Levin) நியமிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் வைரலாகும் பதிவுகள் உண்மைக்கு மாறானவை என்று அமெரிக்க நியூஸ்வீக் (newsweek) எனற அமெரிக்க செய்தி நிறுவனம் மறுத்துள்ளது.
”Fact Check: Did Israel Just Appoint an Interim Prime Minister? அதாவது உண்மைச் சரிபார்ப்பு: ”இஸ்ரேல், தற்காலிகப் பிரதமரை நியமித்ததா” என்ற கேள்வியோடு செய்தியை நியுஸ்வீக் வெளியிட்டிருக்கிறது.
நெதன்யாகு பற்றிய பதிவு, “Headlines360” என்ற முகநுலில் முதலில் தோன்றியது. இது சகலருடைய கவனத்தையும் ஈர்த்தது, ஏறத்தாள, 8,000 தடவைகள் ஏனைய முகநூல் பக்கங்களில் பகிரப்பட்டதாகவும், சென்ற புதன்கிழமை பிற்பகல் வரை 11,000 இற்கும் அதிகமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டது எனவும் நியுஸ்வீக் தெரிவிக்கிறது.
இருப்பினும், நெதன்யாகு பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்றோ அல்லது அவருக்குப் பதிலாக லெவின் நியமிக்கப்பட்டதாகவோ அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அல்லது அறிவிப்புகள் எதுவும் இல்லை எனவும் நியூஸ்வீக் சுட்டிக்காட்டியுள்ளது.
நெதன்யாகு ஒரு கையில் ஆறு விரல்களுடன் இருப்பதைக் காண்பிக்கும் சமூக ஊடக பதிவுகள் வெளியான பின்னர், புதிய பிரதமர் பதவியேற்பு என்ற தகவல்கள் வெளியானது.
ஆனால் அவை அனைத்துமே செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் - படங்கள் என சிலர் வாதிட்டனர்.
இருப்பினும், நெதன்யாகு இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. AI வீடியோவை மையமாகக் கொண்ட, சமூக ஊடக வதந்திகள் என நியூஸ்வீக் கற்பிதம் செய்கிறது...
நெதன்யாகு நன்றாக இருப்பதாக இஸ்ரேல் பிரமரின் அலுவலகம் நியூஸ் வீக்கிடம் கூறியதாகவும், அவரது மரணம் குறித்த வதந்திகள் "போலி செய்தி" என்றும் கூறியதாக விபரிக்கப்பட்டுள்ளது.
56 வயதான லெவின், தற்போது இஸ்ரேல் துணைப் பிரதமராகவும், நீதி - உள்துறை - மத சேவை அமைச்சர் உள்ளிட்ட பல பாதவிகளை வகிக்கிறார். அவர் நெதன்யாகுவின் லிகுட் (Likud) அரசியல் கட்சியின் உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
ஆனால், நியூஸ்வீக் வெளியிட்ட இச் செய்தி பற்றியோ அல்லது இஸ்ரேல் பிரதமர் உயிருடன் இருப்பது பற்றிய செய்திகளையோ ஐரோப்பிய ஊடகங்கள் எதுவும் முக்கியத்தும் கொடுக்கவில்லை.
அவை வெறுமனே முகநூல் பதிவுகள் தான், என்று நியூஸ்வீக் வெளியிட்ட செய்தியைக் கூட ஏனைய அமெரிக்க ஊடகங்கள் கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
எம்எஸ்என் (msn) என்ற மற்றொரு அமெரிக்க செய்தி நிறுவனம் மாத்திரம் நியூஸ்வீக் பிரசுரித்த செய்தியை மீள் பிரசுரம் செய்திருக்கிறது.
ஆனால், நியூஸ்வீக் செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக அதிகாரபூர்வமான முறையில் உறுதிப்படுத்தியதைத் தவிர, இதுவரையும் நெதன்யாகு தொடர்பாக, இஸ்ரேல் அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
சமூக ஊடக பதிவுகளுக்கு ஏன் பதில் வழங்க வேண்டும் என இஸ்ரேல் நிர்வாகம் கருதக் கூடும்.
ஆனாலும் அமெரிக்க - இஸ்ரேல் ஊடகங்களில் நெதன்யாகுவினுடைய சமகால படங்கள் அல்லது கூட்டங்களில் பங்குகொண்ட படங்கள் - வீடியோக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
போர்க்காலத்தில் வெளி நடமாட்டங்கள், கூட்டங்களில் பங்குகொள்ளும் காட்சிகள்- படங்கள் வெளியிடுவதை தவிர்ப்பது, பாதுகாப்பு உத்தியாக இருக்கலாம்...
ஆனாலும், ”உண்மையை சரிபார்த்தல்“ என்ற நியூஸ்வீக் செய்தின் பின்னூட்டத்தில் பதிவாகும் விமர்சனங்கள் (Comments) பல சிந்தனைகளை தூண்டுகின்றன.
அ.நிக்ஸன்-பத்திரிகையாளர்
Editor