மத்திய கிழக்கில் அமெரிக்காவின் 25 ஆண்டு கால 8.2 ரில்லியன் டொலர் செலவீனம்"

மத்திய கிழக்கில் அமெரிக்கா 8.2 ரில்லியன் டொலர் செலவீனம்

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் 25 ஆண்டு கால 8.2 ரில்லியன் டொலர் செலவீனம்"
Senator Tim Kaine,
ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றம்) செனட் சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இருபத்து ஐந்து வருடங்களாக மத்திய கிழக்கில் நடந்த போர்களில் இருந்து அமெரிக்கா எதையும் கற்றுக் கொள்ளவில்லையா எனவும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதாக குளேபல் ரைம்ஸ் (globaltimes) என்ற சீன ஆங்கில ஊடகம் இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
14,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் மற்றும் படை வழிநடத்துனர்கள் கொல்லப்பட்டனர், 65,000 ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர், ஆயிரக் கணக்கில் பொதுமக்கள் இறந்தனர்.
8.2 ரில்லியன் டொலர்களை அமெரிக்காவிலேயே செலவழித்திருக்கலாம் என ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிம் கெனி (Tim Kaine) செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதியின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஜனநாயக் கட்சி அதற்கு ஒத்துழைக்கும் எனவும் தெரிவித்தனர்.
செனட் சபையின் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் (Chuck Schumer) செய்தியாளர்கள் மத்தியில் ஈரானுக்கு எதிரான போரை கடுமையாக விமர்சித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனநாயக கட்சியின் செனட் சபை உறுப்பினர்கள், வோசிங்டனில் (Washington, D.C) உள்ள கப்பிற்ரோல் கில் கேட்போர் கூடத்தில் (capitol Hill) செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
ஈரான் அரசுக்கு எதிரான போர் அமெரிக்க அரசியல் யாப்புக்கு முரணானது எனவும், போர் நடத்த வேண்டிய அவசியத்துக்கான காரணங்கள் எதனையும் ட்ரம்ப், இதுவரை வெளிடவில்லை எனவும் செனட் சபை உறுப்பினர்கள் ஆதங்கப்பட்டனர்.
அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், பாதுகாப்பு, முன் எச்சரிக்கை, இவற்றில் எது? பகுத்தறிவு நியாயம் மாறிக்கொண்டே இருக்கும் போது, ​​எந்த மூலோபாயமும் இல்லை. எந்த உத்தியும் இல்லை என்று ஏனைய செனட் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
குடியரசுக் கட்சி அங்கத்தவர்களில் அதிகளவானோர், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களை ஆதரிப்பதைக் கருத்தில் கொண்டு ட்ரம் போரை நடத்துகிறார்.
இதனால் போர் அதிகாரங்கள் தீர்மானம் பற்றி விரைவில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.
போர் அதிகாரங்கள் சட்டம் என்பது 1973 ஆம் ஆண்டின் அமெரிக்க கூட்டாட்சிச் சட்டமாகும், இது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் அமெரிக்கப் படைகளை ஆயுத மோதல்களில் ஈடுபடுத்தும் ஜனாதிபதியின் தனித்த முடிவை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-