எங்களை ஆட்சி செய்ய விடாமல் தடுக்கவே சிலர் சூழலை பயன்படுத்துகின்றனர்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

எங்களை ஆட்சி செய்ய விடாமல் தடுக்கவே சிலர் சூழலை பயன்படுத்துகின்றனர்

எங்களை ஆட்சி செய்ய விடாமல் தடுக்கவே சிலர் சூழலை பயன்படுத்துகின்றனர்" - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இல்லையென்றால் தற்போதைய நெருக்கடி சூழ்நிலைகளால் நாடு மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் என திக்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,  என்று தெரிவித்தார்.

மட்டக்களப் புபழைய மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:கடந்த கால சுனாமி, வெள்ளம் போன்ற அனர்த்தங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடுப் பணம் அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. இன்று செல்வந்தர்களாகக் காணப்படும் பல அரசியல்வாதிகளுக்கு அந்தப் பணமே ஆதாரம் என்பது மக்களுக்குத் தெரியும்.

தமது அரசாங்கம் சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே, முன்னைய கொள்ளைகள் தடுக்கப்பட்டு, அந்த நிதியைக் கொண்டு இன்று மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது. தற்போது வளைகுடாப் பகுதியில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடி உலக நாடுகள் பலவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் ஒரு மாதத்திற்கான எரிபொருள் சேமிப்பு மாத்திரமே உள்ளது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான எரிபொருளைச் சேகரித்து வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 10000 மில்லியன் ரூபா பாதிப்பை ஏற்படுத்திய திக்வா புயலில் இருந்து மீன்பிடித் துறையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.நாட்டில் மாற்றமான அரசியல் முன்னெடுக்கப்படும் வேளையில், சில அரசியல்வாதிகள் உலகளாவிய நெருக்கடி சூழ்நிலையைப் பயன்படுத்தி குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

நாடு முழுவதையும் ஒன்றிணைக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவம், புலனாய்வுப் பிரிவு, குடிவரவு குடியகல்வு, நடிகர்கள், நடிகைகள் என அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ள போதைப்பொருள் வலைப்பின்னலை முற்றாக ஒழிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.