இந்தியாவிலிருந்து 36,700 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடைந்தது

36,700 மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவிலிருந்து 36,700 மெற்றிக் தொன்  எரிபொருள்   நாட்டை வந்தடைந்தது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 6,700 மெற்றிக் தொன் 'ஒக்டேன் 92' தரப் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று (15ஆம் திகதி) நாட்டை வந்தடைந்துள்ளது.

நாட்டினுள் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகவே இந்தியாவிடமிருந்து இந்தப் பெட்ரோல் இருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீப காலமாக எரிபொருள் வழங்கலைச் சீராகப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கொள்முதல் அமைவதாகக் கருதப்படுகிறது.

இதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இறக்கும் பணிகள் முழுமையடைந்தவுடன், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இருப்பு கிடைத்துள்ளதால், சந்தையில் 'ஒக்டேன் 92' வகைப் பெட்ரோலுக்கான பற்றாக்குறை நீங்கி, விநியோகம் மேலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.