விஜய் தலைமையில் தவெக 234 தமிழக, 30 புதுச்சேரி வேட்பாளர்கள் அறிமும்
தவெக 234 தமிழக, 30 புதுச்சேரி வேட்பாளர்கள் ,அறிமும்
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போடியிடும் ,தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை - நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார். நிகழ்ச்சி 500 பேரை மட்டுமே அனுமதிக்கும் உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.
கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் மக்களின் ஏகாபத்த ஆதரவுடன், தமிழக வெற்றிக் கழகம் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தொடரும் அரசியல் வேட்பாளர்களின் வாக்கு சதிகளை மாற்றும் முயற்சிகளுக்கு இடையில், மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலை கழகம் முன்னெடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், விசில் சின்னத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை முன்னெடுக்க கழக தோழர்கள் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Editor