பெண்களை குறிவைத்து மூன்று ஆண்டுகளில் 12,000 இணையவழி குற்றப்புகார்கள் !
பெண்களை குறிவைத்து மூன்று ஆண்டுகளில் 12,000 குற்றப்புகார்கள் !
பெண்களை குறிவைத்து இடம்பெற்ற இணையவழி குற்றச்செயல்கள் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சரின் தகவலின்படி, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகள் இதுவரை தீர்வு செய்யப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றச்செயல்கள் தொடர்பாக 4,103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 753 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3,348 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 3,159 முறைப்பாடுகளில் 982 முறைப்பாடுகள் தீர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 2,177 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றச்செயல்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
அவற்றில் 572 முறைப்பாடுகள் தீர்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்..
Editor