மன்னிப்புக் கேட்டால் போதாது - கடும் நடவடிக்கை" : அமைச்சர் லால் காந்தா அதிரடி
மன்னிப்புக் கேட்டால் போதாது - கடும் நடவடிக்கை
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபட்டு, பிடிபட்ட பின்னர் மன்னிப்புக் கேட்போருக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்படாது என்று வேளாண் அமைச்சர் கே.டி. லால் காந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் தாக்கல் செய்த சொத்து அறிக்கையைத் தவறாக வெளியிட்ட ஹிரு டிவிக்கு எதிராக அவர் சட்ட நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த தொலைக்காட்சி மன்னிப்பு வெளியிட்டும், மீண்டும் ஏப்ரல் 20 அன்று பதில் அறிக்கை வெளியிட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் கூறுகையில், "அரசு முதலில் பொறுமையாக இருந்தது, ஆனால் இப்போது சட்டம் தூங்காது. ஒரு நபர் மீது ஏற்கனவே நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று உறுதிபடத் தெரிவித்தார்.
159 இடங்கள் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மக்கள் அரசுக்கு வலுவான ஆணை வழங்கியுள்ளதாகவும், எனவே அரசு செயலற்றுக் கிடக்காது என்றும் லால் காந்தா சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் தரம் தாழ்த்த முயன்றாலும், நெல் வாரியம் நவீனமயமாக்குதல், பேரிடர் விவசாயிகளுக்கு உதவுதல் போன்ற சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
"இனி செவிமடுக்கும் காலம் முடிந்தது - சட்டப்பூர்வ பொறுப்புக்கூறல் கட்டம் தொடங்கியுள்ளது" என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
Editor