கொழும்பு மாநகர சபையின் வாகன நிறுத்துமிட கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம்

வாகன நிறுத்துமிட கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம்

கொழும்பு மாநகர சபையின் வாகன நிறுத்துமிட கட்டணம் தற்காலிகமாக நிறுத்தம்

நிலவும் நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துணை மாநகராதிபதி ஹேமந்த வீரகோன் அவர்கள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தியே மாநகர சபை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, இன்று முதல் மேலதிக அறிவித்தல் வரை, கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான எந்தவொரு வாகன நிறுத்துமிடத்திலும் வாகன கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

இந்த முடிவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என துணை மாநகராதிபதி மேலும் வலியுறுத்தினார்.