ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை மார்ச் 31ல் முடிவுக்கு வரும் -உதய கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை மார்ச் 31 முடிவுக்கு வரும்

ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை மார்ச் 31ல் முடிவுக்கு வரும் -உதய கம்மன்பில

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளை யார் என்பது குறித்த ஏழு ஆண்டுகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மார்ச் 31 ஆம் தேதி அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய அமைப்பின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் 'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூளையைக் கண்டறிதல்' (Finding the Mastermind of the Easter Sunday Attacks) எனும் நூலைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த நூல் மார்ச் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தாக்குதலின் பின்னணியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையின் சில உயர் அதிகாரிகள் இருப்பதாக தனது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகக் கம்மன்பில சுட்டிக்காட்டினார். எனவே, இந்த உண்மைகளை காவல்துறையிடம் ஒப்படைப்பதை விட, நேரடியாக மக்களிடம் வெளியிடுவதே பொருத்தமானது என்று அவர் விளக்கினார்.