டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: – ஈரானிய ஹெலிகாப்டரை அழித்தது இஸ்ரேல்

டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்:

டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்:  – ஈரானிய ஹெலிகாப்டரை அழித்தது இஸ்ரேல்

மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், Tel Aviv நகரை குறிவைத்து ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலால் நகரில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The Times of Israel வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின் படி, தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து மத்திய இஸ்ரேல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிப்பான்கள் தொடர்ந்து ஒலிக்கப்பட்டன. இதனால் மக்கள் பாதுகாப்பு அறைகள் மற்றும் அடைக்கலங்களுக்கு அவசரமாகச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், Iran நாட்டின் Hamadan Province பகுதியில் உள்ள Sanandaj Airport விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய இராணுவத்தின் Mi-17 helicopter (எம்.ஐ–17 ஹெலிகாப்டர்) ஒன்றை தாம் தாக்கி அழித்ததாக Israel Defense Forces (இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்) அறிவித்துள்ளது.

புதன்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் குறித்து விளக்கமளித்த இஸ்ரேலிய இராணுவம், துல்லியமான இந்த நடவடிக்கை “நிகழ்நேர உளவு தகவல்கள்” அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை தீவிரமடைந்து, சர்வதேச மட்டத்தில் கவலை அதிகரித்து வருகிறது.