ஈரான் ஏவுகணை நிலைகள் அழிக்கப்படவில்லை
ஈரான் ஏவுகணை அழிக்கப்படவில்லை
*தெஹ்ரானின் ஏவுகணைகள் பறந்து கொண்டே இருப்பதாக அமெரிக்க ஊடகம் விமர்சனம்..
அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணை நிலைகள் தாக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை அழிக்கப்படவில்லை என அமெரிக்க செய்தித் தளமான த வோள் சிரீட் ஜேர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
ஏறத்தாள நான்கு வாரப் போரில் இத் தாக்குதல்கள் நடைபெற்றாலும். ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக சுடடிக்காட்டியுள்ளது.
தெஹ்ரானின் ஏவுகணைகள் பறந்து கொண்டே இருப்பதாக த வோள் சிரீட் ஜேர்னல் விமர்சிக்கிறது.
பாரசீக வளைகுடா கடற்கரைக்கு அருகிலுள்ள ஈரானிய தளங்கள் மற்றும் ட்ரக் லோஞ்சர்கள் (truck launchers) மீது போரின் ஆரம்பத்தில் வான்வழித் தாக்குதல்கள் பெரும் எண்ணிக்கையில் நடத்தப்படடன.
அத் தாக்குதலின்பின்னர், ஈரான் தனது எல்லைக்குள் இருந்து நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளததாக முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஈரான் ஒரு நாளைக்கு சுமார் ஒரு டசின் ஏவுகணைகளை வீசுகிறது. ஆரம்பத்தில் அதிகமான ஏவுகணைகளை ஈரான் வீசியிருந்தது.
ஆனால், அவை இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு நாடுகளில் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாகவும், அச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, கடந்த நான்கு வாரங்களாக, ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்கள் பலனளிக்கவில்லை என்பதை, இந்த அமெரிக்க செய்தத் தளம் சொல்லாமல் சொல்கிறதா, என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அ.நிக்ஸன் பத்திரிகையாளர்
Editor