இலங்கையில் ஈரானிய கப்பல் தஞ்சம்: ஈரானுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Protest in Colombo in support of Iran

இலங்கையில் ஈரானிய கப்பல் தஞ்சம்: ஈரானுக்கு ஆதரவாக கொழும்பில்  ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஈரானிய கப்பல் தஞ்சம்: ஈரானுக்கு ஆதரவாக கொழும்பில்  ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில்அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து கொழும்பில் இன்று (06) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே' (No Blood for Oil) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், "அமெரிக்கா வெளியேறு", "இஸ்ரேல் கொலைகாரன்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என இதன் போது கோசமிட்டனர்.அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் போர் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் ஈரானுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய போர்க்கப்பல் காலி துறைமுகத்தில் அனுமதிக்கப்பட 11 மணித்தியாலங்கள் காத்திருக்க வைக்கப்பட்டதன் பின்னணி குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இந்தத் தாமதத்தின்போதே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலைத்  மூழ்கடித்ததாகவும்அத்தாக்குதலில் 87 மாலுமிகள் உயிரிழந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசு ஈரானிய கப்பலொன்றுக்கு அடைக்கலம் அளித்த சூழலில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஈரானிய கப்பலான 'ஐஆர்ஐஎஸ் புஷெஹர்இலங்கையில் அடைக்கலம் புகுந்தது. இக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களும் பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டுகொழும்பு வெளிசாரா இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டம்அண்மையில் இலங்கை அரசு மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, "ஒவ்வொரு உயிரும் நமது சொந்த உயிர்போன்று மதிப்புமிக்கது" என தெரிவித்துள்ளார். இலங்கை தனது நடுநிலைக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவதாகவும்மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்இலங்கை அரசு எடுத்துள்ள இந்த மனிதாபிமான நடவடிக்கைகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.