ஏப்ரல் 10ல் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கை யில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (19) நடைபெற்ற அக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர் பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.. அதன்படி, குறித்த விவாதம் அன்றைய தினம் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும்.
அதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 9ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரை நடத்தவும் குழு உத்தேசித்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப் பட்டதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித் தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கையொப்பத்துடன் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கான காரணங்கள் அமைச்சர் மீதான இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகளின் அடிப் படையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட் டுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி: நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு தரமான நிலக்கரியை பெற்றுக்கொள்வதை உறுதி செய்யத் தவறியமை. இது தேசிய எரிசக்தி சொத்தை மேற்பார்வையிடுவதில் கடமைப் புறக்கணிப்பாக கருதப்படுவதாக பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முந்தைய ஊழல் குற்றச்சாட்டு: இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்ததாக கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கும் இப்பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Editor